சென்னை ஆட்டோக்களின் பர்மிட்கள் சிஎம்டிஏ எல்லை வரை நீட்டிப்பு

 
ஊரடங்கு - வாடகை ஆட்டோ

சென்னை ஆட்டோக்களின் பர்மிட்டுகளை சிஎம்டிஏ எல்லைவரை நீட்டித்து  போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிக வருமானம் - வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவு -  'Namma Yatri' ஆட்டோ சென்னையில் அறிம


சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூலமே நேரடியாக செல்லும் நிலை உள்ளது. ஆட்டோக்களில் பர்மிட்  பிரச்சினை காரணமாக நேரடியாக கிளாம்பாக்கம் வரை பயணம் செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது. எனவே ஆட்டோ  ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பர்மிட்டை நீட்டித்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

Chennai autos to get GPS – India TV

அதனை ஏற்று போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், இனி சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் சிஎம்டிஏ எல்லை வரை  உள்ள பகுதிகளுக்குள் சென்று வர முடியும். இதனால் இனி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எல்லையை தாண்டியதாக அபராதங்கள் காவல்துறையாலும் ஆர்டிஓ அதிகாரிகளும் விதிக்கப்படாது. இதுவரை இருந்த நடைமுறையின் படி எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுக்கு எடுக்கப்படும் பர்மிட் அதனை சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் வரை மட்டுமே இயக்க முடியும் என இருந்தது. இதனால் சென்னையில் இருந்து  கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை ஆட்டோக்கள் செல்வதில் பிரச்சனை நீடித்து வந்தது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.