சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழா நீட்டிப்பு

 
ttnt

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் சென்னை தீவுத்திடலில் சென்னை திருவிழா நடைபெற்று வருகிறது. 22 மாநிலங்கள் 10 நாடுகளில் இருந்து கைவினை, கைத்தறி பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வரும் நிலையில் உணவு திருவிழாவும் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை மற்றும் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்  இந்தாண்டும் சென்னை திருவிழா நடைபெற்று வரும் நிலையில்  தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து உணவு திருவிழாவையும், கைவினைப் பொருட்களையும் ருசித்தும், ரசித்தும் செல்கின்றனர். இதற்கு நுழைவு கட்டணமாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 

tn
வகை வகையான உணவுகள் வித்தியாசமான கைவினைப் பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ள  நிலையில் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள் சார்பில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்காக 40 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

tn

இந்த சூழலில் சென்னை திருவிழா நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி வரை தீவு திடலில் சென்னை உணவுத் திருவிழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.