ஆகஸ்ட் 25ம் தேதி முதல் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 1978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டமானது விரிவுபடுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. திருக்குவளையில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நகர்புற கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 318 அரசு பள்ளிகளில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவ மாணவிகள் பயன்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.


