12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் கவனத்திற்கு...!!

 
dpi building

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

school

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் மே 8ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகின. மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்ற பொது தேர்விற்காக  தமிழ்நாட்டில்  8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 பேரும் விண்ணப்பித்து இருந்த நிலையில்  தமிழ்நாட்டில்   8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். இதில்  7,55,450 பேர் தேர்ச்சி பெற, 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தனர். 

school

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டது.  பொது தேர்வு எழுதாத மாணவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி துணை தேர்வு நடத்தப்படும் என்று கூறி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது .  துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் மே 9ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் நல்ன்கருதி துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.