தொடர் விடுமுறை- சொந்த ஊரை நோக்கி படையெடுக்கும் மக்கள்
தொடர் மூன்று நாட்கள் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து மக்கள் வெளியேறி வருவதால் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர் முதல் மறைமலைநகர், மல்ராசபுரம், சிங்கபெருமாள்கோவில், மகேந்திராசிட்டி, பரனூர், வரை பதினெந்து கிலோ மீட்டர் தூரத்திற்க்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளது. நாளை சித்ரா பௌர்ணமி என்பதால் பெரும்பாலான மக்கள் திருவண்ணாமலை நோக்கி படைபெடுத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள மக்கள் தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளதின் காரணத்தினால் இருசக்கர வாகனங்கள் முதல் மூன்று சக்கர வாகனங்கள், கார், வேன், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் தென் மாவட்டத்தை நோக்கி செல்கின்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசலில் பொதுக்களும் வாகன ஓட்டிகளும் சிக்கி தவிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

