பயணிகள் கவனத்திற்கு.... 3 நாட்களுக்கு தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது
விரைவு ரயில்கள் ஆக.15, 16, 17ம் தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டுவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தினமும் காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாம்பரம் ரயில்வே யார்டு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவு ரயில்கள் ஆகஸ்ட் 15,16,17 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் நோக்கிச் செல்லும் விரைவு ரயில்கள் அதற்கு பதிலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.