விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி
Feb 5, 2025, 14:52 IST1738747361758

விருதுநகர் அருகே சின்னவாடியில் உள்ள சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள் வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு அறைகள் தரைமட்டமானது. அறையில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் பட்டாசுகள் ஒட்டுமொத்தமாக வெடித்து சிதறியதால் வானளவு புகைமூட்டம் எழுந்தது. இதனால் பட்டாசு ஆலையில் இருந்தவர்களும், அருகில் இருந்தவர்களும் அலறியடித்து ஓடினர்.