எல் நினோவால் கடும் வெப்பம், கனமழை- பள்ளி நேரத்தை மாற்ற நிபுணர் குழு பரிந்துரை
எல் நினோவால் கடும் வெப்பம், கனமழை ஏற்படக்கூடும் என்பதால் பள்ளி நேரத்தை மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் கடும் வெப்பத்தால் ஏற்படும் ககாதார பாதிப்புகளை கண்காணிக்க வேண்டும். டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்தி, அத்தியாவசிய மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும். கடும் வெப்பம் நிலவும் நாட்களில் பள்ளி நேரத்தை மாற்ற வேண்டும். வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, பருவநிலைக்கு ஏற்ற சீருடை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை பாதுகாக்க உயரமான இடங்களில் பாதுகாப்பான தங்குமிடங்களை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும். மருத்துவமனைகள், குடிநீர் வழங்கும் அமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாற்று மின்சார வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.

