அறிமுக நாயகன் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு..! பிப்ரவரி 13-ல் வெளியாகிறது விஜய் ஆண்டனி தயாரித்த 'பூக்கி'!
விஜய் ஆண்டனி தனது நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். ஆனால், ‘பூக்கி’ அவருக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், இப்படத்தின் மூலம் தனது அக்கா மகனான அஜய் தீஷனை (Ajay Dhishan) தமிழ் சினிமாவிற்குப் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். அஜய் தீஷன் ஏற்கனவே சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்றாலும், ஒரு நாயகனாக அவருக்கு இதுதான் முதல் முறை. படத்தின் பாடல்களைத் தானே இசையமைத்ததுடன், படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செதுக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி, 2K கிட்ஸ்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி” காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்கான (Satellite and Digital Rights) போட்டி திரைமறைவில் பலமாக நடந்து வந்தது. இறுதியில், முன்னணி நிறுவனமான ஜீ (Zee) குழுமம் இந்தப் போட்டியைக் கைப்பற்றியுள்ளது.திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே ஒரு அறிமுக நாயகனின் படத்திற்கு இவ்வளவு பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பது, விஜய் ஆண்டனி மீதான நம்பிக்கையையும், படத்தின் கதை மீதான எதிர்பார்ப்பையும் காட்டுகிறது.

