தலைகீழாக மாறிய நிலை! அதிர்ச்சி கொடுக்கும் #EXITPOLL

 
எனது தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் - விஜய் வாக்குறுதி

தமிழ்நாட்டில் கடந்த 23ம் தேதி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 

மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி 122-132 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 87-110  இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 10-12 இடங்களை மட்டுமே பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  பிற கட்சிகள் 0-6 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக்- பி மார்க் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி 125-145, அதிமுக கூட்டணி 65-85 இடங்கள் மற்றும் தவெக 16-26 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.