நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி..! இன்று நடைபெறவிருந்த பாஜக கூட்டம் திடீர் ரத்து..!

 
1

தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 19ம் தேதி தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தம் 23 தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தது.

சென்னை அமைந்தகரை அய்யாவு திருமண மண்டபத்தில் மத்திய சென்னை தொகுதி பாஜ தலைமை பணிமனையில் நேற்று முன்தினம் அமர்ந்திருந்த அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமாரை மத்திய வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி என்பவர் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டு பயங்கர மோதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். பின்னர் இருவரும், அமைந்தகரை போலீசில் புகார் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், "தேர்தல் பணிக்காக பாஜ சார்பில் வாட்ஸ் அப் குருப்பில் கட்சி சார்பாக பதிவு செய்து வந்துள்ளனர். அந்த குருப்பில் மூர்த்தி, ராஜ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாட்ஸ் குருப்பில் திட்டி கொண்டனர். ஆத்திரமடைந்த ராஜ்குமார், வாட்ஸ் அப் கால் மூலம் முர்த்திக்கு போன் செய்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மூர்த்தி பாஜவில் சீனியர் என்றும் ராஜ்குமார் என்பவருக்கு அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் பதவி கொடுத்ததில் ஏற்கனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக மூர்த்தி, ராஜ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அமைந்தகரை போலீசார் மூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தேர்தலில் பணம் வினியோக பிரச்னை தொடர்பாக பாஜ தலைமைக்கு தொடர்ந்து புகார் மேல் புகார் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் கட்சிக்குள் இப்படி புகார் வருவது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.