Ex.அமைச்சா் சிவசங்காின் PA கைது!

 
அ

மோசடி புகாரில் EX அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சா் சிவசங்காின் உதவியாளர் இளம் செழியனை கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிாிவு காவல்துறை. போக்குவரத்துத்துறை அமைச்சராக சிவசங்கா் இருந்தபோது அந்த துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த புகாாில் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் கைமாறியது எப்படி? எந்த அளவுக்கு மோசடி? யாரிடம் பணம் சென்று சேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து சிவசங்கர் அளித்துள்ள விளக்கத்தில், “மோசடி புகாரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் கைது என வெளியான செய்தி தவறானது. இளஞ்செழியன் என்ற பெயரில் எனக்கு எந்த உதவியாளரும் கிடையாது. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.