”100 நாள்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கிருக்காங்க" - ரகுபதி

 
ரகுபதி

கே.என்.நேரு வீட்டை சுத்தம் பண்ண வேண்டிய அவசியமே இல்ல.. அடிக்கடி DVAC வந்து சுத்தம் பண்ணிட்டு போயிடுறாங்க என முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, “விஜய் ஆட்சிக்கு வந்தால், பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், 100 நாள்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்கு செலவிடப்படவில்லை. நாங்கள் (திமுக) கடன் மட்டுமே வைத்துவிட்டு சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களை விட பல மடங்கு கடன் வாங்குகிற ஆட்சியாக தான் தற்போதைய தவெக ஆட்சி உள்ளது. த.வெ.க ஆட்சி எங்களை போல பல மடங்கு கடன் வாங்குவார்கள்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என்றும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வீட்டை சுத்தம் செய்து கொடுத்துவிட்டனர். ஓடக்கூடாதுனு சொல்லிட்டு ஓடுன ஒரே ஆள் அவர்தான்... Reels விட்டு ஆட்சிக்கு வந்தாங்க.. அவர் வந்தா பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னாங்க. த.வெ.கவை பார்த்து எங்களுக்கு பயமெல்லாம் இல்லை. வட தமிழ்நாட்டில் மட்டும் தான் எங்களுக்கு ஓட்டு சதவீதம் குறைந்து இருக்கிறது. நாங்களும் நல்லா தான் ஓட்டு வாங்கி இருக்கோம்” என்றார்.