"பாஜக அரசு பெண்களை "நரி" என்று குறிப்பிடலாமா?"
பாஜக அரசு பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு குறித்து கொண்டு வரும் "நரி சக்தி வந்தன் அதினியம்" என்ற அரசமைப்புச்சட்ட திருத்தத்தில் இருந்து "நரி" என்ற சொல்லை அகற்ற வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில், "பாஜக அரசு பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு குறித்து கொண்டு வரும் "நரி சக்தி வந்தன் அதினியம்" என்ற அரசமைப்புச்சட்ட திருத்தத்தில் இருந்து "நரி" என்ற சொல்லை அகற்ற வேண்டும். "நரி" என்ற சொல் தென்னிந்திய பெண்களை இழிவுபடுத்தும் வண்ணம் இருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வாழும் கோந்தி மொழி பேசும் மக்களின் வழக்கில் "நரி" என்பதற்கு காட்டில் வாழும் fox என்ற விலங்கை குறிக்கின்றனர். "நாறி" என்ற உச்சரிப்பு தீய நாற்றமுடையவர் என்று குறிக்கும்.
பாஜக அரசு பெண்களை "நரி" என்று குறிப்பிடலாமா?
— Mano Thangaraj (@Manothangaraj) November 27, 2026
பாஜக அரசு பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு குறித்து கொண்டு வரும் "நரி சக்தி வந்தன் அதினியம்" என்ற அரசமைப்புச்சட்ட திருத்தத்தில் இருந்து "நரி" என்ற சொல்லை அகற்ற வேண்டும்.
"நரி" என்ற சொல் தென்னிந்திய பெண்களை இழிவுபடுத்தும் வண்ணம்… pic.twitter.com/fVfdhb8O6B
ஆங்கிலத்தில் Women's Empowerment Act என்று அனைவருக்கும் பொதுவான மொழியில் குறிப்பிடுவதில் என்ன தவறு? சமஸ்கிருத திணிப்பின் மூலம் தென்னிந்திய பெண்களை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

