“தங்க மோதிரம் வழங்கும் திட்டம் எங்களுடையது”- மா.சு. பதிவு
தமிழ்ப் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 2009 ஆண்டு தொடங்பட்டதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்ப் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 2009 ஆண்டு தொடங்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 86-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சியால் தூய தமிழ்ப் பெயர்களை ஊக்குவிக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து, தமிழில் பெயர் வைக்கப்படும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
அன்றைய துணை முதல்வர் வணக்கத்திற்குரிய தளபதி அவர்களால்,நாம் மேயராக இருந்த போது இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டது. தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவமனைப் பிரசவங்களை அதிகரிப்பதுமான நோக்கதோடு வெற்றிகரமாக சற்றொப்ப 17 ஆண்டுகளுக்கு முன்பே,இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கி நடைமுறைப்படுத்தியது திராவிடமாடல் மாநகராட்சி நிர்வாகம் தான் என்பதை எண்ணி பெருமைகொள்வோம்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

