திருமாவளவனை முதல்வராக்க சொன்னேன் - உண்மையை உடைத்த சி.வி.சண்முகம்

 
திருமாவளவனை முதல்வராக்க சொன்னேன் - உண்மையை உடைத்த சி.வி.சண்முகம்

திமுகவுக்கு நாங்கள்தான் கூட்டணி பேசினோம் என சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “திமுகவுக்கு நாங்கள்தான் கூட்டணி பேசினோம் என சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்.விசிக தலைவா் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்று நான்தான் சொன்னேன். திமுக ஆதரவுடன் ஈபிஎஸ் முதல்வராகும் போது, திருமாவை முதல்வா் ஆக்கிவிட்டு மற்ற அதிமுகவினரை அமைச்சராக்கலாம் என கூறினேன். ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. வெற்றி என்றால் ஈபிஎஸ். தோல்வி என்றால் மாவட்ட செயலாளரா? ஈபிஎஸ்க்கு சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு இல்லையா? வட மாவட்டங்களில் பாமக ஆதரவால் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தென் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஈபிஎஸ் தான் இன்றும் பொதுச்செயலாளர். ஈபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.

அதிமுக குறித்து பேச அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு என்ன தகுதி இருக்கிறது. சிறை கைதி எங்களுக்கு பாடம் எடுக்கிறார். அவர் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது தன் கீழ் பணியாற்றிய ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமைச்சரவையிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் சிறையிலும் அடைக்கப்பட்டவர். அந்த வழகு இன்றும் நிலுவையில்தான் உள்ளது. அப்படிப்பட்ட குற்றவாளி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்” என விமர்சித்தார்.