ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?- தவெகவுக்கு அன்பில் மகேஸ் கேள்வி

 
anbil magesh

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய ரூ.5,109.9 கோடி கல்வி நிதி நிலுவை பற்றி மானியக் கோரிக்கையில் பேச வேண்டிய துறைசார் அமைச்சர் ஏன் மௌனம் காத்தார்? சட்டமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ பேசாததற்கு காரணம் என்ன? என தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.



தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.5,109.92 கோடி நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டு ரூ.1,788 கோடி, 2025-26ஆம் நிதியாண்டு ரூ.1,496 கோடி மற்றும் 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.1,825 கோடி நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், “இதை பற்றி மானியக் கோரிக்கையில் பேச வேண்டிய துறைசார் அமைச்சர் ஏன் மௌனம் காத்தார்? சட்டமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ பேசாததற்கு காரணம் என்ன?ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதைப்பற்றி இந்த த.வெ.க. அரசு மக்களுக்கும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். Diversion இல்லாமல் நேரடியான விளக்கம் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.