அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் வீட்டில் சோதனை- அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

 
s

திருச்சியில் அன்பில் மகேஸ் இல்லத்தில் 9 மணி நேரத்திற்கு மேலாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்தது.

சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “8 மணிநேரத்துக்கு மேல் என் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அனைத்து அறைகளிலும் போலீசார் சோதனை செய்ய அனுமதித்தேன். வரும் 18ஆம் தேதி என்னை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சோதனையின் முடிவில் டிஜிட்டல் ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம். மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை. தவெக அரசை விமர்சிப்பதால் சோதனை நடைபெறுகிறது. தவெக அரசின் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம்.” என்றார்.