தவெகவுக்கு 41% வாக்குகள் கன்பார்ம்- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி

 
தவெகவுக்கு 41% வாக்குகள் கன்பார்ம்- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி

தவெகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கேட்பில் தெரியவந்துள்ளதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதிக்கு 10 முன்னாள் காவல்துறையினரை வைத்து 2340 பேர் 234 தொகுதிகளிலும் 2.34 லட்சம் பேரிடம் அனைத்து வயதினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 4.88 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் 40 குடும்பங்களிடம் சர்வே செய்யப்பட்டது. முடிவில் தவெகவுக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கேட்பில் தெரியவந்துள்ளது. அதாவது கருத்துக்கேட்ட நபர்களில் 41 சதவீதம் பேர் தவெகவுக்கு வாக்களித்துள்ளதாக கூறியுள்ளனர்.  காலம்காலமாக திமுக மற்றும் அதிமுக வாக்களித்த ஒரு சிலர் இந்த முறைக்கு விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்களித்துள்ளனர். இதற்கு காரணம் கேட்டபோது, என்னுடைய பேரக்குழந்தைகள், மகன், மகள் விஜய்க்கு ஓட்டு போட சொன்னதாகவும் கூறியது ஆச்சர்யம் அளிக்கிறது. கொங்கு மண்டலத்தில் திமுக, அதிமுக, தவெக மூன்றுமே சமமான எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றுள்ளன. சென்னையில் தவெகவுக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. 121 இடங்களில் தவெக நிச்சயம் வெற்றி பெறும்” எனக் கூறியுள்ளார்.