வாக்குச்சாவடியில் பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் கணவர்

 
tt

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

murder

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. அப்போது டி.கொசப்பாளையத்தை சேர்ந்த கனிமொழி வாக்கு செலுத்த வரிசையில் காத்திருந்தார். அப்போது கனிமொழியை அவரது முன்னாள் கணவர் ஏழுமலை கத்தியால் குத்திவிட்டு தப்பமுயன்றார். 

தாக்குதலுக்கு ஆளான் பெண்

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஏழுமலையை மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறுக் காரணமாக கத்தியால் குத்தியதாக போலீஸ் விசாரணையில் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. கொசப்பாளையம் வாக்கு பதிவு மையத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.