#BREAKING அண்ணன் சீர் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

 
vijay

அண்ணன் சீர் திட்டத்தில் பயன் பெற மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.  அரசு இ-சேவை மையங்கள், www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

அண்ணன் சீர் திட்டம்- தகுதிகள்:

திருமணமாகும் மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

05.10.2026 - 15.01.2027 ~ திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களுக்கான செயல்முறை 

திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை!)

விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் மூலம் தகுதி சரிபார்க்கப்படும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமணப் பத்திரிகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தகுதியான விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

விண்ணப்ப நிலை குறித்த தகவல் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.

தகுதியின்மை காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.