கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை- ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று இளங்கோவன் முன்னிலை

 
evks elangovan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது இறுதிச்சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 64 ஆயிரம் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 869 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 443 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இடைத்தேர்தல் வெற்றியின்மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராகிறார். 75 வயதான ஈவிகேஎஸ் இளங்கோவன் 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பதிவான ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 192 வாக்குகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 869 வாக்குகளை பெற்று இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. 2004 முதல் 2009 வரை கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தார்.