'தனித்து நிற்க வேண்டும் என்பது பேராசை'... செல்வப்பெருந்தகைக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு

 
evks elangovan

"எத்தனை காலம் பிறரை சார்ந்து இருப்பது?"  என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

EVKS and Stalin

காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “எவ்வளவு காலம் சார்ந்து இருக்கப்போகிறோம்?” என பேசினார். இதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொடுத்த பதிலால் காங்கிரஸ் பொதுக் குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


எதிரியை ஒழிக்காமல், எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள். தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக.. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அனைவரும் எம்.பி ஆகியிருப்பதற்கு காரணம் திமுகவும், மு.க.ஸ்டாலினும் தான். தனித்து நின்ற போது டெபாசிட் இழந்தோம். எதிரியை  வீழ்த்த வேண்டும் என்பதுதான் நம் இலக்கு. அதைவிட்டுவிட்டு நான் தான் நிற்பேன், நான் தான் தோற்பேன் என்றால் அது உங்கள் இஷ்டம்” என்றார்.