"அண்ணாமலையும்,பாஜகவும் வெத்து வேட்டு என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும்" - ஈவிகேஎஸ் இளங்கோவன்

 
evks elangovan

ஈரோடு கிழக்கில் நான் போட்டியிடவில்லை  என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.   ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்த முறை அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியே இம்முறையும் களம் காண்கிறது. இருப்பினும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும்   வெளியாகவில்லை. இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவனிடம்  கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த திருமகன் ஈவேராவின் சகோதரரை களம் இறக்க தமிழக காங்கிரஸ் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 

tn

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியில்லை .இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு  கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்.  கட்சி தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஏற்பேன். இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் . அண்ணாமலையும்,பாஜகவும் வெத்து வேட்டு என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும். ஆளுநர் ரவியின் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டும் எதிர்ப்பு அவருக்கு மிகப்பெரும் பெருமையையும் நல்ல பெயரையும் ஏற்படுத்தி உள்ளது" என்று  தெரிவித்தார்.