அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கிறது; ஓபன் பண்ண வச்சிடாதீங்க - விஜய்..!!

 
1

அமைச்சர் ராஜ்மோகன் சட்டப் பேரவையில் பேசுகையில், "என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் ஆதாரம் காட்டுங்கள் என்று எதிர் தரப்பினர் சொல்கிறார்கள். ஆதாரங்களை நாங்கள் காண்பித்தால் தவறு நடந்திருப்பதாக எதிர் தரப்பினர் ஒப்புக்கொள்கிறார்கள். முதலமைச்சர் வைத்திருக்கும் ஆதாரத்தை காட்டினால் அவர்கள் நிலைமையை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் விஜய், "எதிர்க்கட்சியினர் ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிறார்கள். கடந்த வாரம் நிதி அமைச்சர் பேரவையில் பேசும்போது மூன்று துறைகளின் ஆய்வு கோப்புகள் எனது மேசையில் இருப்பதாக தெரிவித்தார். அவர் போற போக்கில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனது மேசையில் அந்த கோப்புகள் உள்ளன. அதுவும் ஆதாரத்துடன் உள்ளது. அதை ஓபன் பண்ண வைத்து விடாதீர்கள். எதை எப்போ ஓபன் பண்ணனுமோ அது அப்போ கரெக்டா ஓபன் ஆகும்" என்றார்.

உடனடியாக அமைச்சர் ரமேஷ் எழுந்து, "அனைவரும் பேசுங்கள் பேசுங்கள் என்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் பேச ஆரம்பித்தால் அவர்கள் ஆதாரத்தை காட்ட சொல்கிறார்கள். அதனை காட்ட ஆரம்பித்தால் என்ன நடக்கும்" என்றார்.

அப்போதும் குறுக்கிட்ட முதல்வர் ஜோசப் விஜய், "மக்களிடம் எப்பொழுது பேச வேண்டும், என்ன பேச வேண்டும் எதைப் பேச வேண்டும் என அனைத்தையும் பேசிவிட்டுத் தான் அன்பாக ஆசையாக மக்கள் எங்கள் அனைவரையும் சட்டப்பேரவையில் அமர வைத்துள்ளார்கள். நான் பேசுவேன். பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை, இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கனும்ல?" என்றார்.