பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க ஸ்டாலின் - எடப்பாடி அட்டாக்!
ஆம்பூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ''இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின், விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே குடும்ப தலைவிகள், உரிமைத்தொகை பெற்று வந்துள்ளவர்களுக்கு 3 மாதத்திற்கு முன் பணமாக 3000 ஆயிரம் ரூபாய் எனவும், கோடை கால தொகுப்பு என 2000 வழங்கப்படும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் காரணங்களையும், தெரிவித்துள்ளார். எங்களையும், மத்திய அரசையும் குறிப்பிட்டு சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி உரிமைத்தொகை நிறுத்தப்படும் என்பது வடிக்கட்டிய பொய்.
2024 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் போது உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தேர்தல் தோல்வி பயமாக, தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் வாக்குகளை பெறுவதற்காக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மக்களிடையே, செல்வாக்கை இழந்துள்ளது திமுக.
2022, 2023, 2024, 2025 ஆண்டுகளில் கோடை காலம் வந்துள்ளது. 2026 கோடை காலம் மட்டும் எப்படி கண்ணுக்கு தெரிகிறது. குடும்பத்தலைவி கஷ்டத்தை பார்க்கவில்லை. தேர்தலில் அஞ்சியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் திமுக ஆட்சி ஏற்றவுடன் மாதந்தோறும் 1000 என அறிவித்தார். 27 மாதம் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சியான நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆட்சி ஏற்றவுடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பை நம்பி குடும்ப தலைவிகள் வாக்களித்தார்கள்.
27 மாதம் தொடர்ந்து வலியுறுத்தினோம். 28 ஆம் மாதத்தில் இருந்து தான் திமுக உரிமைத்தொகை அளித்துள்ளது. 27 மாதம் பாதிக்கப்படவில்லையா குடும்ப தலைவிகள்? திட்டமிட்டு தேர்தலை வைத்து குடும்ப தலைவிகள் வாக்கு பெறுவதற்காக இந்த அறிவிப்பு. பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள் ஸ்டாலின்.
விஞ்ஞான கல்வி கிடைக்க லேப்டாப் அம்மா அளித்த திட்டம். இந்த திட்டத்தை முடக்கி தோல்வி பயத்தில் வாக்கு தேவை என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். 2025 ஆம் ஆண்டு லேப்டாப் அளித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு கொடுக்கிறார்கள். அமித்ஷா தமிழகத்திற்கு வருவது அவரது கட்சி நிகழ்ச்சிக்கு. வாய்ப்பு வரும் போது அவரை சந்திப்போம்.
இன்னும் எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்சியில் கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு அதிமுக ஆட்சியில் கடும் தண்டனை வழங்கப்படும். விஜய் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை. எந்த ஆட்சி அமைக்கப்படும் என மக்களுக்கு தெரியும். விஜய்க்கு என்ன தெரியும்? உங்களுக்கு தெரியும். பிரச்சனை நடந்து 72 மணி நேரத்திற்கு பிறகு வரவில்லை.
நாடாளுமன்ற விவகாரம் முழுமையாக தெரியாது. அப்படி ஒரு சம்பவம் நடந்தது தவறு. பிரதமரை முடக்குவது தவறு. ஊடகத்திலும், பத்திரிகையிலும் சர்வாதிகாரி போன்று செயல்படுகின்றனர். விமர்சனம் பற்றி கவலைப்படாத கட்சி அதிமுக'' என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

