“ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.
விஷச் சாராயம் மட்டுமில்லாமல், போதைப் பொருள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம். ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். இந்த அரசு இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்கோடநாடு கொலை வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 8 செல்போன்கள் ஆய்விற்கு அனுப்பபட்டுள்ளது. வெளிநாட்டு அழைப்புகளும் இருப்பதால் இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.
காவல்துறையில் கடந்த 3 ஆண்டு காலத்தில் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மற்றும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிறு குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களை மாற்றுவதற்குப் பறவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.புகார்களை விரைந்து விசாரிக்கவும் நீதிமன்ற வழக்குகளை விரைந்து நடத்தவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றங்களின் எண்ணிக்கை குறைப்பது அல்ல குற்ற எண்ணத்தைக் குறைப்பது தான் காவல்துறையின் பணியாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன் என்றார்.