5 மாதங்கள் ஆகியும் பல்வீர் சிங் மீது இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை- அறப்போர் இயக்கம்

 
“பல்லை உடைக்கும் சைக்கோ விசாரணைகளை முதல்வர் ஆதரிக்கிறாரா? பல்வீர் சிங்கை கைது செய்யாதது ஏன்?”

பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது 5 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

Image

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ASP யாக பணியாற்றிய பல்வீர் சிங் IPS மற்றும் இதர காவலர்கள் பலரது பற்களை பிடுங்கி சித்திரவதை செய்தது மார்ச் மாதம் வெளிவந்தது. ஏப்ரல் மாதம் இந்த விசாரணை CBCID க்கு மாற்றப்பட்டது. 4 FIR கள் வரை போடப்பட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல்வீர் சிங் கைதும் செய்யப்படவில்லை. 

CBCID விசாரணை முடித்து விட்டதாகவும் தமிழ்நாடு அரசு உள்துறை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளிப்பதில் தாமதம் இருப்பதாக கேள்விப்பட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அதன் நிலையை கேட்டோம். ஆனால் அது ரகசியம் என்று கூறி வழக்கின் நிலை குறித்து தகவல் தர முடியாது என்று அரசு பதில் அளித்து உள்ளது. இது போன்ற அப்பட்டமான வழக்கில் கூட அரசு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க விரும்பவில்லை. மேலும் சில IPS லாபியின் அழுத்தமும் அரசுக்கு இருப்பதாக கேள்விப்படுகிறோம். 


எனவே அரசு உடனடியாக பல்வீர் சிங் மற்றும் மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இனியும் தாமதிக்காமல்  உடனே CBCID க்கு அனுமதி தரும் படி கோரி இன்று மனு அனுப்பி உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.