சீமான் பேச்சை நாங்கள் எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை- எ.வ.வேலு

 
ev velu

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அறுவழி சாலையாக அமைக்கும் பணி தற்போது நெடுஞ்சாலை துறை மூலமாக நடைபெறுகிறது. சுமார் 165 கோடி மதிப்பீட்டில் கொட்டிவாக்கம் முதல் அக்கரை வரை நெடுஞ்சாலை, மின்சாரவாரியம், குடிநிர் வாரியம் என ஒருங்கினைந்து பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அக்கரையில் அதிகாரிகளுடன் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய அவர், அதிகாரிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கவும், ஒப்பந்ததாரர்கள் இரவு நேரத்தில் வேலைகளை அதிக ஆட்களை நியமித்து பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Image


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, “2009ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோதே சாலை விரிவாக்கத்திற்கு நில எடுப்புக்கு 10 கோடி என மதிப்பிடப்பட்டது அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போன நிலையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வளர்ச்சியடைந்த பகுதியாக ஆனது அதனால் தற்போது நில எடுப்புக்கு மட்டும் ஆயிரம் கோடி செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 95 சதவிகிதம் நிலம் எடுக்கப்பட்டுவிட்டது. மின்வாரியம் மூலம் 75 சதவிகிதம் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்ன. குடிநீர் வாரியம் முலம் 65 சதவிகிதம் குடிநீர் குழாய், பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கெட்டிவாக்கம் முதல் அக்கரை வரையில் 8.6 கி.மீ தூரத்தில் கொட்டிவாக்கம், பாலவாக்கம் இரண்டு பகுதிகள் மார்ச் மாதத்தில் முடியும், மற்ற பகுதிகளும் விரைவு படுத்தப்பட்ட நிலையில் மே மாதம் இருதியில் முழுவதும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

Image


அதுப்பொல் திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான இதே அறுவழிசாலையில் மேலும் நெரிசலை முற்றிலும் தவிர்க்க உயர்மட்ட சாலைகள் அமைக்க திட்டமிடபடுகிறது. இந்த தூரத்தில் 137 குறுக்கு சாலைகளை கடக்கவே வாகன ஓட்டிகளுக்கு 45 நிமிடம் ஆகிறது. அதனால் உயர்மட்ட சாலை திட்டம் அமைக்க திட்டப்பணிகள் நடைபெற்று அதில் பல மாற்றங்களும் செய்யப்படலாம். சீமான் பேச்சை நாங்கள் எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவில்லை,  எங்கள் அரசியல் வாழ்க்கையில் பல மேடு பள்ளத்தை பார்த்துள்ளோம், முதலமைச்சர் அரசியல் வாழ்கை 60 ஆண்டுகாலம் நெடியது. நான் அவர் கீழ் உள்ள தொண்டன் நான் படிக்கும் காலத்தில் என்ன என்ன போராட்டம் தியாகம் செய்துள்ளேன்” என்றார்.