மாரிமுத்து உடலுக்கு எதிர்நீச்சல் குழுவினர் கண்ணீர் மல்க அஞ்சலி

 
tn

மறைந்த நடிகர் மாரிமுத்து உடலுக்கு எதிர்நீச்சல் குழுவினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

tn

நடிகரும் ,இயக்குனருமான மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறலாம். எதிர்நீச்சல் சீரியல் மூலமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து சீரியல் ரசிகர்கள் மட்டுமின்றி இணையதள ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர் நடித்து வந்த குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இவரின் வசனம், தோரணை  என அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களில் மாரிமுத்துவின் வசனங்களும் அவரது புகைப்படங்களும் வைரல் ஆகி வந்தன.  இந்த சூழலில் இன்று காலை நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

th

இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் ஒட்டுமொத்தமாக வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் திருச்செல்வம் ,கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, விபு , கமலேஷ்  என ஒட்டுமொத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர், நடிகைகளும் மாரிமுத்துவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.