#BREAKING 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்!

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.
சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் எதிர்நீச்சல். இத்தொடரை திருசெல்வம் இயக்கி வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையையும், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பது போல இந்த எதிர்நீச்சல் தொடர் அமைந்துள்ளது. இந்த மெகா தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வருகிறார்.
ஆதி குணசேகரன் கேரக்டரில் அசத்தி வந்த இவருக்கு சமூக வலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்தம்மா ஏய் என்ற வசனம் பல மீம்ஸ்களை உருவாக்கியது.
இந்நிலையில் நடிகரும் , இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை 8.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரிமுத்து மறைவு திரையுலகினர் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.