"குடும்பம் அனுபவித்த துன்பத்திற்கு யார் பொறுப்பு ? - எருமசாணி விஜய் வேதனை
குடும்பம் அனுபவித்த துன்பத்திற்கு யார் பொறுப்பு என எருமசாணி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளி்பரப்பாகும் ரிசார்ட் வெப் சீரிஸில் நடித்துவரும் நடிகை அனுராகா நம்பியார் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். அதற்கு காரணம் எருமை சாணி விஜய் மற்றும் அவரது மனைவி என்றும் எனக் கூறியிருந்தார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தயாரிப்பு தரப்பிடம் பணம் கேட்ட நிலையில், அதற்கு எருமசாணி விஜய்யின் மனைவி நக்ஷத்திரா அசிங்க அசிங்கமாக பேசியதாகவும் அனுராகா நம்பியார் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் எருமசாணி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பம் அனுபவித்த துன்பத்திற்கு யார் பொறுப்பு?அனுக்கிரஹா சமூக ஊடகங்களில் எங்கள்மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்போது அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட்டு, எதுவும் நடக்காதது போல மறைந்துவிட்டார். இப்போது வீடியோக்களை நீக்கிவிட்டால், என் குடும்பம் நானும் அனுபவித்த வலி, மனஅழுத்தம், அவமானம் இவை அனைத்தும் மறைந்துவிடுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

