+2 தேர்வில் எடுத்ததோ 88 மார்க் கிடைத்ததோ 58! விடைத்தாள் திருத்துவதில் குளறுபடி

 
தேர்வு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகின. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07% அதிகம்) அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாள் முதல்,  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. 

இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தியதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மறுகூட்டலுக்காக பணம் செலுத்தி விடைத்தாள் நகலை பெற்ற மாணவர் ஒருவருக்கு, மொத்த மதிப்பெண் 88 என கொடுத்துவிட்டு, மேலே 58 என அதை திருத்திய ஆசிரியர் பதிவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்கள் வாங்கிய மாணவருக்கு 58 மதிப்பெண் போட்டுள்ளனர்.