VIP பாஸ்... ஈரோடு பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனிவழி!
டிச.18ல் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில், பெண்களுக்கு தனிவழி அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
டிச.18ல் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில், பெண்களுக்கு தனிவழி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய்யை பார்ப்பதற்கு VIP பாஸ் வழங்கப்பட்டுள்ளது. விஜய் பேசும் இடத்திற்கு அருகில் 4 இடங்களில் தலா 500 பெண்கள் வீதம் 2,000 பெண்கள் பாதுகாப்பாக நிற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


