சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி - கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து பலி!

 
dead

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சமப்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தியாகமூர்த்தி என்பவர் கல்லூரி பயின்று வந்தார். இந்த நிலையில் அவர் வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மேலே சென்ற மின்கம்பி அறுந்து கீழே தொங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் தியாகமூர்த்தி சென்ற போது மின்கம்பி அவர் மீது உரசியுள்ளது. இதில் தியாகமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தியாகமூர்த்தியின் உடலை உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.