இடைத்தேர்தல் - வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

 
Erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. நாளை நடைபெறும் இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதிமுக, பாஜக, தேமுதிக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 237 வாக்குச்சாவடிகளுக்கு, EVM இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடி மையங்களில் பலத்த போலீள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.