ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்!

 
erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. 
 
பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஒரு மனு நிராகரிக்கப்பட்டது.  இதனால் இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி தொடங்கியது.

நிந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. அங்கன்வாடி ஊழியர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு,, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 05ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.