ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - சீமானுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - சீமானுக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு  தாக்கல்! | Erode Byelection NTK Candidate Seethalakshmi Nomination Filed -  kamadenu tamil

பிப்ரவரி 5.ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18்.ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  இந்நிலையில் இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு முதல் நபராக அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். மாலை 3 மணி வரை 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில் 47 பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான திமுகவிற்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. அடுத்ததாக நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க மனுவில் கேட்டிருந்தனர். ஆனால் அந்த சின்னத்தை வேறு கட்சிக்கு தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதால் அதனை ஒதுக்க தேர்தல் நடத்தும் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இரண்டாவது விருப்பமாக கோரிய மைக் சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குவதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி திமுகவுக்கே... ரகசியம் சொல்லும் வி.சி.  சந்திரகுமார் - மின்னம்பலம்

இதனைத் தொடர்ந்து 12 பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒரே சின்னத்தை பல சுயேச்சைகள் கோரியதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது..  47 பேர் போட்டியிடுவதால் வாக்கு பதிவிற்காக 3 பேலட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.  கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக மற்றும் சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது...