ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இன்று வெளியாகிறது அறிவிப்பு!

 
election commision

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14ம் தேதிஉயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானது. 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் நிலையில், அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்  நடைபெறவுள்ளது.