உயிரை குடித்த டெங்கு.. ஈரோட்டில் அதிர்ச்சி
Nov 3, 2025, 17:41 IST1762171903559
அந்தியூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர், கல்லகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (45), கூலி தொழிலாளியான இவர் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமானது, இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் குணசேகரன் உயிர் இழந்ததை அடுத்து அப்பகுதியில் முகாமிட்ட மருத்துவத்துறையினர் அப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


