ஈரோடு இடைத்தேர்தல்- பறக்கும் படையினர் சோதனையில் ரூ.6.20 லட்சம் பறிமுதல்

 
ச்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Image

இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பறக்கும் படையினர், கேரளா மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.  கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர். 

இதேபோல், ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது,  காரில் வந்த கேரளாவை சேர்ந்த மாட்டு வியாபாரி முனீர் என்பவரிடம் ஆவணங்கள் இன்றி இருந்த 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதேபோல்  செங்கோடம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் காரில் வந்த கார் விற்பனை நிலைய மேலாளர் ஹரி பிரசாத் என்பவரிடம் இருந்து  2 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 2 வியாபாரிகள், கார் விற்பனை நிலைய மேலாளர் என பறக்கும் படையினர்.6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.