"என் vote எங்க?..எனக்கு பதிலா வேற யாரோ Vote போட்டுட்டாங்க"- ஈரோட்டில் வாக்களிக்க வந்த பெண் அதிர்ச்சி

 
ச்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை ஏழு மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 11 மணி நேர நிலவரப்படி 26.03% வாக்குபதிவு நடைபெற்றுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு போது வளையக்காரன் வீதியில் ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 168 -பூத்தில்  பரிதாபேகம் என்பவர் கணவர் ஜாபருலாவுடன் வாக்கு செலுத்த வந்தார். கணவன் வாக்களித்த நிலையில் பரிதாபேகம் வாக்கு செலுத்த சென்றபோது, ஏற்கனவே அவரது வாக்கு செலுத்தி விட்டதாக வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர் மற்றும் முகவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தார். கணவனுடன் வாக்களிக்க தற்போது வந்துள்ளேன் எனது வாக்கை மற்றவர்கள் எப்படி வாக்களிக்கலாம் என வாக்குச்சாவடி  அலுவலரிடம் முறையிட்ட பின் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 

வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய பரிதாபேகம், “என் vote எங்க?..எனக்கு பதிலா வேற யாரோ Vote போட்டுட்டாங்க.. அதிகாரிகள் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டுறாங்க.. உள்ள ஏதோ நடக்குது சார். தனது வாக்கினை மற்றவர்கள் எப்படி செலுத்த முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.