ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

 
tn

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன்  மகன் சஞ்சயை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

election

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார்.  சமீபத்தில் திருமகன் ஈவேரா எம்எல்ஏ உயிரிழந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

election

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்த முறை அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியே இம்முறையும் களம் காண்கிறது. இருப்பினும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும்   வெளியாகவில்லை. இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவனிடம்  கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.  

tn

இந்நிலையில்  ஈரோடு இடைத்தேர்தலில் உயிரிழந்த திருமகன் ஈவேராவின் சகோதரரை களம் இறக்க தமிழக காங்கிரஸ் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை இடைத்தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.