பாஜகவில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்த ஈரோடு நிர்வாகிகள்

 
Annamalai

ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள், கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். 

bjp

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்  முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜ பிரச்சார பிரிவு செயலாளர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளராக அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று அவர் பாஜவில் இருந்து விலகி கவுந்தப்பாடியில் உள்ள முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் வீட்டில் அதிமுகவில் இணைந்தார். அவருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வன் உள்ளிட்ட 50 பேர் அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் முனியப்பன். தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.