விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்

 
fff

நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளையொட்டி ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

vijay

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர்  விஜய். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கோலிவுட்டின் கதாநாயகனாக மாறி ரசிகர்களின் மத்தியில் தளபதியாக தடம் பதித்துள்ளார். தற்போது இவர் அடுத்தக்கட்டமாக அரசியலில் காலெடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்த சூழலில் விஜய் இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டுவருகிறார். 


இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. @actorvijay அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.