செல்லூர் ராஜூவை காரில் ஏற்ற மறுத்த ஈபிஎஸ்!
சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி காரில் செல்லூர் ராஜூ ஏற முயன்றபோது, அந்த வாகனத்தில் ஏற முயன்றபோது அந்த வாகனத்தில் ஏற வேண்டாம் என ஈபிஎஸ் கூறினார்.

பொதுவாக பிரச்சாரத்திற்கு போகின்ற தலைவர்கள் தாங்கள் பயணிக்கின்ற வாகனங்களில் உள்ளூர் தலைவர்களை அழைத்துக்கொள்வது இயல்பு. அப்படித்தான் செல்லூர்ராஜூவும் மதுரையில் எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பயணிக்கும் காரில் ஏற முயற்சிக்கிறார். இதில் ஏறாதே அந்த காரில் வா என்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன் சொந்தக் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களையே தனது காரில் ஏறுவதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்தது பெரும் பேச்சுப்பொருளாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள செல்லூர் ராஜூ, “எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது எந்த அதிருப்தியும் இல்லை; இடமில்லாத காரணத்தால்தான் என்னால் அந்த வாகனத்தில் செல்ல முடியவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு, z பிரிவாக அதிகரிக்கப்பட்டதால், அவர் காரில் அதிகாரிகள் இருந்தனர். அதனால் காரில் ஏற்றவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றேன்” எனக் கூறியுள்ளார்.

