ஆளுநர் உரையில் ரூ.2500 குறித்த அறிவிப்பு எங்கே?- எடப்பாடி பழனிசாமி

 
அ

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது. 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தவெக. மகளிருக்கு மாதந்தோறும் தருவதாக அறிவித்த ரூ.2500 குறித்த அறிவிப்பு எங்கே ? தூக்கத்தை தொலைத்த அரசாங்கம் தவெக.. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம் தான் தவெக” என்றார்.