ஈபிஎஸ்- நயினார் நாகேந்திரன் ஆலோசனை! இறுதி செய்யப்பட்ட தொகுதி பங்கீடு?
Feb 16, 2026, 21:27 IST1771257450199
சென்னையில் ஈபிஎஸ் உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும், ஒருவாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரியாதை நிமித்தமாக பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

