ஈரோடு இடைத்தேர்தல்- முன்னாள் அமைச்சர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை

 
திண்டுக்கல் சீனிவாசன்

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாலை ஐந்து மணிக்கு  தொடங்கியது. 

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக  அதிமுக முக்கிய நிர்வாகிகளான  மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,  கே.பி.அன்பழகன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் , கேபி.முனுசாமி,  திண்டுகல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்,  விஜயபாஸ்கர்  , காமராஜ் , வளர்மதி, உடுமலை ராதாகிருஷ்ணன், KC.வீரமணி , ராஜேந்திர பாலாஜி,  செல்லூர் ராஜ் , எம்.சி. சம்பத் , இசக்கி சுப்பையா , ஓ.எஸ்.மணியன் என முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலுக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது, இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் சுயேட்சையாக போட்டியிடுவது குறித்தும், பாஜக நிலைபாட்டை அறிந்து செயல்படுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.