‘இபிஎஸ்-க்கு வேற வேலை கிடையாது; அதைப்பற்றி கவலை இல்லை’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 
 ‘இபிஎஸ்-க்கு வேற வேலை கிடையாது; அதைப்பற்றி கவலை இல்லை’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

 'எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேற வேலை கிடையாது.. அதைப் பற்றி கவலை இல்லை' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு அக்டோபர் 3ம் தேதி  ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது.   ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2027-ம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 Image

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற வரும் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒன்றிய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் மனோகர் லால் கட்டார் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரையில் கனமழை பெய்திருந்தாலும் இரவு நேரத்திற்குள் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. மதுரை மாவட்ட அமைச்சர்கள் 2 பேர் முகமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

8 இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளத.  மற்றபடி பெரிய பிரச்சனை இல்லை. இன்று மழை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டங்கள் நடைபெற்று வருகிறது” என்றார். 

stalin

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடன் வாங்கி அரசு நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதலமைச்சரர், “எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறு வேலை இல்லை. அவருடைய பெயர் தினமும் பத்திரிக்கையில் வர வேண்டும்; டிவியில் முகம் வரவேண்டும் என்பதால், எதையோ சொல்லி வருகிறார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. அந்த நிதியை உடனடியாக தர வேண்டும் என்று கேட்டு வருகிறோம்” என்று கூறினார்.